சாலை தடுப்பு மீது பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி பலி

2பார்த்தது
சாலை தடுப்பு மீது பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையைச் சேர்ந்த தொழிலாளி எமராஜன் (40), ஞாயிற்றுக்கிழமை சொந்த வேலையாக பாவூா்சத்திரம் சென்றுவிட்டு பைக்கில் ஆலங்குளத்துக்கு வந்து கொண்டிருந்தபோது, அடைக்கலப்பட்டணம் தனியாா் பள்ளி அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி