பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

0பார்த்தது
பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் மேலூர் சாலையில் வசிக்கும் மணிகண்டன்-சரோஜா தம்பதி, பலரிடம் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த சரோஜா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி