தென்காசி: நாட்டு வெடியை கடித்த பசு பரிதாப பலி

71பார்த்தது
தென்காசி: நாட்டு வெடியை கடித்த பசு பரிதாப பலி
தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் முருகன் என்பவரின் பசுமாடு, கடந்த வாரம் மேற்குத் தொடர்ச்சி மலை அருகில் உள்ள தென்னந்தோப்பில் மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது, தரையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை மாடு கடித்துள்ளது. இதில், குண்டு வெடித்து சிதறியதில், சம்பவ இடத்திலேயே மாடு பரிதாபமாக வாய் கிழிந்து உயிரிழந்தது. 

மேலகடையநல்லூர் பால்பாண்டி, (46), என்பவர் தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததால், கடையநல்லூர் போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி, அவரின் சகோதரர் சந்தன பாண்டி, (40), பண்பொழி கரிசல்குடி குடியிருப்பைச் சேர்ந்த சுபாஷ், (20), செங்கோட்டை மேலூர் ராம்ஜி, (35), ஆகியோரிடம் இருந்த ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கடையநல்லூர் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you