தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஜோதி முருகன் என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தனியாக சென்ற அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜோதி முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.