ஆலங்குளம்: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முறைகேடு

668பார்த்தது
ஆலங்குளம்: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முறைகேடு
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, 20-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 2025-26ஆம் ஆண்டிற்கான 125 வீடுகள் சில ஊராட்சிகளுக்கு அதிகமாகவும், சில ஊராட்சிகளுக்கு குறைவாகவும், 13 ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமலும் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலீஸ் தாயம்மாளிடம் முறையிட்டும் உரிய பதில் கிடைக்காததால் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி