தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று பட்டப்பகலில், காவல் நிலையம் அருகே நடந்து சென்ற பெண்மணியிடம் வாலிபர் ஒருவர் தாலி செயினை பறித்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டிப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். கடையநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில், செயினை பறித்தவர் கடையநல்லூர் வானவர் தெருவைச் சேர்ந்த அருமன் சாலிக் என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.