திருவேங்கடத்தில் மாற்றுத்திறனாளிகள் இன்று சாலை மறியல்

678பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் காந்தி மண்டபம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ஆந்திரா மாநிலத்தைப் போல் உயர்த்தி வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில் ஈடுபட்டவர்களை திருவேங்கடம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.