தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று மாலை நடைபெற்ற ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பாஜகவின் பிரசாரப் பயணக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் கோதை மாரியப்பன், பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், பாலசீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் தர்மர் வரவேற்புரை ஆற்றினார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, செல்வமோகன்தாஸ் பாண்டியன், தமாகா மாவட்டத் தலைவர் எஸ். ஆர். அய்யாத்துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.