சொக்கம்பட்டி அருகே வாழைகளை சேதப்படுத்திய யானைகள்

64பார்த்தது
சொக்கம்பட்டி அருகே வாழைகளை சேதப்படுத்திய யானைகள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் சொக்கம்பட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் மா, தேக்கு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிக்குள் நள்ளிரவு புகுந்த யானைகள் அங்கிருந்த வாழைகளை சேதப்படுத்தியதாம். இதையடுத்து அப்பகுதியை கடையநல்லூர் வனச்சரகர் கனகராஜ் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி