தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிகாரிகள் அருவிக்கு வரும் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.