புளியங்குடி பள்ளியில் 186 பேருக்கு மடிக்கணினி வழங்கினர்

0பார்த்தது
புளியங்குடி பள்ளியில் 186 பேருக்கு மடிக்கணினி வழங்கினர்
தென்காசி மாவட்டம் புளியங்குடி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், 186 மாணவர்-மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல்கிஷோர் தலைமை தாங்கி, மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ராணி ஸ்ரீகுமார் எம்.பி., சதன் திருமலைகுமார் எம்எல்ஏ, அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரித் தாளாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார், தமிழ்த் துறைத் தலைவர் ராமராஜ் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி