தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே ஆனைகுளம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் சாலையோரம் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சேர்ந்தமரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி, உயிரிழந்தவர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.