தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு பகுதி பேட்டையைச் சேர்ந்த திவான் மைதீன் மகன் முஸம்மில் (22) நேற்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். காயமடைந்த முஸம்மில் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரித்து, அவரது நண்பரான அபூபக்கரை (22) கைது செய்தனர்.