தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காளத்திமடம் பகுதியைச் சேர்ந்த காமராஜ் (52) என்பவர், குடும்பத்துடன் சென்னையில் தங்கி வியாபாரம் செய்து வந்தார். கருப்பசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள சொந்த ஊருக்கு வந்திருந்தபோது, கோவில் அருகிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆலங்குளம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.