தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் தென்காசி மங்கம்மாள் சாலை உப மின்நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நாளை (ஜூன் 10) மின் தடை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக தென்காசி கோட்ட செயற்பொறியாளர் பா. கற்பகவிநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கீழப்பாவூர் மற்றும் மங்கம்மாள் சாலை உப மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே, தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கீழப்புலியூர் ஆகிய பகுதிகளிலும், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிபட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றார் அவர்.