தென்காசி: சாலையில் உள்ள குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை

81பார்த்தது
தென்காசி: சாலையில் உள்ள குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாம்பவர்வடகரை கீழுர் பேருந்து நிறுத்தத்தின் தென்புறம் சுரண்டை செல்லும் மெயின் ரோட்டின் ஓரத்தில் தனியார் நிறுவனம் கேபிள் பதிப்பதற்கு தோண்ட பட்ட குழியில் தினசரி 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் உள்ள குழியில் விழுந்து காயங்கள் ஏற்பட்டும் நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதிப்பது மக்கள் அதிகாரிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியில் பொதுமக்கள் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு இந்த குழியை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.