தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை வெறிநாய் கடித்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பெருமாள் சாமி, புளியங்குடியைச் சேர்ந்த மைக்கேல், கீழப்பாவூரைச் சேர்ந்த செல்வம், சிவகங்கையைச் சேர்ந்த சகாதேவன், காசிமேஜா்புரத்தைச் சேர்ந்த சௌமியா, கருப்பசாமி மற்றும் இரண்டு சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர். காயமடைந்த அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.