தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை வகித்தார். முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மழலையர் பிரிவு மாணவர்கள் அப்துல் ரிஸான், நூருல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
ரமலான் நோன்பு, பண்டிகை குறித்து மாணவி மிருதுளா ஜனனி பேசினார். 6ஆம் வகுப்பு மாணவர்- மாணவியரின் மௌன நாடகம் நடைபெற்றது. விழாவில் மழலையர் பிரிவு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்-மாணவியர் இஸ்லாமிய பாரம்பரிய ஆடைகள் அணிந்து பங்கேற்றனர். ராகுல் வரவேற்றார். ஜீவா நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பிரதிக்ஷா, சுபிக்ஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலர் காந்திமதி, இயக்குநர் ராதாபிரியா, துணை முதல்வர் செல்வலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.