தென்காசி: தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்

2பார்த்தது
தென்காசி: தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
தென்காசி மாவட்டத்தில் வியாழக்கிழமை காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தி, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுத்தனர். விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ. 8.50 லட்சம் மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. புகையிலைப் பொருள்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன, இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி