தென்காசி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம்

79பார்த்தது
தென்காசி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம்
தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மத்திய மாவட்டச் செயலர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சேது அரிகரன், மாவட்டத் தலைவர் குலாம், வடக்கு மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார், செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க மாவட்டச் செயலர் சுந்தர் தொடக்கவுரை ஆற்றினார். 

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை, தமிழக முதல்வராக்கிட அயராது பாடுபடுவது, பாட்டாளி மக்கள் கட்சியின் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் கட்சி உறுப்பினர் சேர்க்கையை துரிதமாக மேற்கொள்வது, தலைமையில் வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் படிவத்தின் மூலம் உறுப்பினர்களை சேர்ப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் திலகபாமா, காணொலி மூலமாக உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி