தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அசோக்குமார் அவர்களை,
திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கலை கதிரவன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி. மு. ராஜேந்திரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு
அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.