தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள ஊர்மேனியழகியான் காட்டுப்பகுதிக்குள் பூபதிராஜன் என்பவரின் கோழிப்பண்ணையில் உரிமம் இன்றி பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், கடையநல்லூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன், ஆய்வாளர் கவிதா, கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா உள்ளிட்டோர் கோழிப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், உரிமம் இன்றி பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் அங்குள்ள வெடிமருந்துகளையும் பட்டாசுகளையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத் துறையினரும் வருவாய்த் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா ஆய்வு செய்தார்.