தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே, ஹிஜாப் அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த 85 வயது மூதாட்டியைத் தாக்கி, பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றார். இந்தச் சம்பவம் குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாரியப்பன் மற்றும் அவரது மனைவி வீரவநல்லூரில் உள்ள உறவினரின் திருமணத்துக்குச் சென்றிருந்த நிலையில், அவரது தாயார் மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.