புளியங்குடியில் புகையிலை கடத்திய இளைஞர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே டி.என். புதுக்குடி பேருந்து நிறுத்தம் அருகில் வாகன சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த முனுசாமி என்ற வாலிபரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். சோதனையில், அவர் புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில், பிள்ளையார் கோயிலை சேர்ந்த சீதாராமன் மகன் முனுசாமி என்பவர் புகையிலை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
