கரிவலம்வந்தநல்லூர் அருகே லாரி மோதி விபத்து 2 பேர் பலி

0பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற செல்லத்துரை மற்றும் அபிமன்யு ஆகியோர் மீது எதிரே வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி