சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி சாலையில், திருச்செந்தூரிலிருந்து சுவாமி தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதியதில் குழந்தை உட்பட ஏழு பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பணவடலிச்சத்திரம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.