தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை சண்முகர் சந்ததியில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் சுவாமி சன்னதி, சங்கரலிங்க சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.