சங்கரன்கோவில் அருகே வாலிபர் தூக்கு போட்டு இன்று தற்கொலை

0பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கடல்ராஜ் (35) என்பவர், வேலைக்குச் செல்லாமல் மது அருந்துவதைப் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த அய்யாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.