சங்கரன்கோவில் அருகே வாலிபர் இன்று தூக்கு போட்டு தற்கொலை

0பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஊத்தங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் சண்முகநாதன் (28) என்பவர் குடும்பப் பிரச்சனை காரணமாக ஊரின் வடக்கு புறம் அமைந்துள்ள விவசாயத் தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சின்னகோவிலாங்குளம் போலீசார் விரைந்து சென்று சண்முகநாதனின் உடலைக் கைப்பற்றி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி