தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, மணிகண்டன் என்ற விவசாயி மரத்தில் ஏறி கள் இறக்கியபோது, போலீசார் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாகவும், பதிலுக்கு அவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் இருவரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் நடத்தினர். சம்பந்தமில்லாத விவசாயி மீது
துப்பாக்கி சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.