தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கள்ளிகுளத்தைச் சேர்ந்த ராமர் மனைவி ராஜமணி (48) என்பவர், ராஜன் என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். ராஜன், ராஜமணியிடம் வாங்கிய பணத்தை கேட்டு வாக்குவாதம் செய்து, அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜமணி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து குருவிகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.