தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலாங்குளம் சேர்ந்த நாகராஜன் (45) என்பவர் இன்று மதியம் ஷேர் ஆட்டோவில் சங்கரன்கோவிலில் இருந்து சண்முகநல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் பெண் காவலர் பிளஸ்சி உட்பட 7 பெண்கள் மற்றும் கார் ஓட்டுநர்
பிரபு ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.