தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு,
திமுக கட்சி சார்பாக இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் ஏற்பாட்டில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமை எம்.எல்.ஏ. ராஜா துவக்கி வைத்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர். திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.