தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெள்ளாடு, செம்மறியாடு வகைகள் அதிகமாக விற்பனைக்கு வந்தன. ஆடுகளின் தரம் மற்றும் எடையைப் பொறுத்து ஒரு ஆடு ₹5,000 முதல் ₹8,000 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாராந்திர சந்தையில் ஒரே நாளில் ₹25 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகி, சுறுசுறுப்பான வர்த்தகம் நடைபெற்றது.