திருவேங்கடத்தில் ஓடைக்குள் கார் பாய்ந்து விபத்து

891பார்த்தது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே சாமிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோ, இன்று (பிப்ரவரி 22) காலை குடும்பத்துடன் திருவேங்கடத்தில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். திருவேங்கடம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் பாய்ந்ததில், இளங்கோ மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி