தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் இன்று காலை வேலைக்குச் சென்ற கட்டிடத் தொழிலாளி பிச்சக்கினி மீது எதிரே வந்த கல்லூரிப் பேருந்து மோதி படுகாயமடைந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் கல்லூரி வாகனத்தைச் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேங்கடம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.