சங்கரன்கோவில் மதசார்பற்ற திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகரச் செயலாளர் எம்.எல்.ஏ. ராஜா தலைமை தாங்கினார். இதில் நகர்மன்றத் தலைவர் கௌசல்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசைக் கண்டித்து அவித்த முட்டையை கையில் ஏந்தி அவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி