சங்கரன்கோவிலில் வ, உ, சி சிதம்பரின் திமுக சார்பில் வீரவணக்கம்

0பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற அலுவலகத்தில், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் அவர்களின் 89-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, குருவிகுளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சேர்மத்துரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வீமராஜ், ஆதித்தமிழர் பேரவை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.