தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே செவல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (58). இவர் குடும்பப் பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அருந்தி, சங்கரன்கோவில் ரயில்வே பிட்டர் சாலையில் உள்ள மதுபான கடை அருகே மயங்கி விழுந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.