சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

0பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலைகொழுந்துபுரம் கிராமத்தில், பரமசிவம் (45) என்பவர் இன்று காலை தனது விவசாய நிலத்தில் மல்லிகை பூ செடிகளுக்கு மருந்து அடிக்க தண்ணீருக்காக கிணற்றில் குடத்தில் கயிறு கட்டி தண்ணீர் இறைக்கும் போது தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். காலில் கயிறு சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பரமசிவம் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சின்னகோவிலான் குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமசிவனுக்கு வாய் பேச முடியாத மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி