விவசாயிகள் கேந்திப் பூவை சாலையில் கொட்டி சென்றனர்

0பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூக்கள் சாகுபடிக்கு உகந்த தட்பவெப்ப நிலை நிலவுவதால் விவசாயிகள் கேந்திப் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். விளைந்த பூக்களை சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கேந்திப் பூ வரத்து அதிகரித்துள்ள நிலையில், இன்று கிலோ ரூ.10க்கு மட்டுமே விற்பனையானது. கட்டுப்படியாகாத விலை காரணமாக, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சுமார் 1000 கிலோ கேந்திப் பூவை சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி