தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் நிலைய வளாகத்தில் வெயில் மற்றும் பலத்த காற்றால் அங்கிருந்த மூங்கில் மரங்களில் தீப்பிடித்து, சுமார் 89 மோட்டார் சைக்கிள்கள் கருகி சேதமடைந்தன. இந்த வாகனங்களின் மதிப்பு சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமாகும். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் மற்ற வாகனங்கள் காப்பாற்றப்பட்டன.