தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவிலில் பூக்குழி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. வருகின்ற 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 10ஆம் நாள் திருநாளை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, மாலை அணிவித்து அம்மனை தரிசனம் செய்தனர்.