தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் கோவிலில் உள்ள 32 வயதான கோமதி யானையின் எடை, உயரம் உட்பட வனத்துறையினர் ஆய்வு செய்தனர். புளியங்குடி வன சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வன ஊழியர்கள், யானையின் உணவு, நடை பயிற்சி, குளியல் போன்றவற்றை யானைப்பாகனிடம் கேட்டறிந்து, தொடர்ந்து இதே போல் பராமரிக்க அறிவுறுத்தினர். கோவில் துணை ஆணையர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.