சங்கரன்கோவில்: கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவு

801பார்த்தது
சங்கரன்கோவிலில், பாரதியார் 2ம் தெருவில் வசிக்கும் ஈஸ்வரி, தேநீர் போடும்போது சமையல் எரிவாயு சிலிண்டர் ரெகுலேட்டரில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சிலிண்டர் ரெகுலேட்டரை அணைத்து, எரிவாயு உருளையை வீட்டிற்கு வெளியே பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். இதனால் ஈஸ்வரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தீயணைப்புத் துறையினரின் இந்த துரித நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி