கடையம் அருகே மாதாபுரத்தைச் சேர்ந்த லெவியாள் (21) என்பவர், குடும்ப தகராறு காரணமாக எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். சில நாட்களாக வயிறு வலிப்பதாகக் கூறிய அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.