தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரைச் சேர்ந்த 32 வயது கூலித் தொழிலாளி அசாருதீன், நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கிணறு அருகே நடந்து செல்லும்போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார், அசாருதீனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.