தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கே. புதூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கரும்பு ஜூஸ் தொழில் செய்து வருகிறார். தொழில் செய்யும் போது, இயந்திரத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கியது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வெல்டிங் ஊழியரை அழைத்து வந்து இயந்திரத்தை வெட்டி, கருப்பசாமியின் கையை மீட்டனர். பலத்த காயமடைந்த கருப்பசாமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.