மாணவ மாணவிகளுக்கு தேர்வு வழிகாட்டி நூலினை எம், எல், ஏ வழங்கள்

0பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பயிலும் 120 மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்பட்டன. தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில், சுமார் 300 ரூபாய் மதிப்புள்ள வினா விடை போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் குருவிகுளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சேர்மதுரை, திருவேங்கடம் நகர செயலாளர் மாரிமுத்து, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொண்இருளாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி