சங்கரன்கோவிலில் படுகாயம் அடைந்த வட மாநில இளைஞரின் கை, முறையாக பதப்படுத்தப்படாத ஐஸ் பெட்டியில் கொடுக்கப்படாமல் பாலிதீன் பையில் வைத்து கொடுக்கப்பட்டதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கலைக் கதிரவன் ஆகியோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் நோயாளியின் சிகிச்சை குறித்தும், சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்தும் கேட்டறிந்தனர்.